மர்மம்:செஞ்சி கோட்டையில் அழியும் ஆலமரங்கள்; இந்திய தொல்லியல் துறை நடவடிக்கை தேவை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜன
2022
05:33

செஞ்சி-செஞ்சி கோட்டைக்கு அழகு சேர்த்து வரும் 200 ஆண்டு கால ஆலமரங்கள் நோய் தாக்கி ஒவ்வொன்றாக அழிந்து வருவதைத் தடுக்க இந்திய தொல்லியல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



செஞ்சியில் உள்ள கோட்டை வரலாற்று சிறப்புமிக்கது மட்டுமின்றி இயற்கை எழில் சூழ்ந்த அழகிய மலைகளையும், ஏராளமான மரங்களையும் கொண்டுள்ளது. இங்குள்ள ஆலமரங்கள் 200 வயதைக் கடந்தவை.ராஜகிரி, கிருஷ்ணகிரி கோட்டைகளின் தரைப்பகுதி, சாதுத்துல்லாகான் மசூதி, ஆஞ்சநேயர் கோவில், சிவன் கோவில், செல்லியம்மன் கோவில், புதுச்சேரி வாயில் மற்றும் ராஜகிரி கோட்டையின் வெளிப்புறம் என 30க்கும் மேற்பட்ட ஆலமரங்கள் இருந்தன.பழமையான இந்த மரங்கள் கடந்த 20 ஆண்டுகளாக நோய் தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றன. அத்துடன் மரங்களின் புற்று நோயாக கருதப்படும் புல்லுருவிகள் மரத்தின் கிளைகளில் வளர்ந்து ஆலமரங்களை அழித்து வருகின்றன.சாதுத்துல்லாகான் மசூதி எதிரே விழுதுகளுடன் 80 மீட்டர் விட்டத்துக்கு படர்ந்து இருந்த மிகப் பெரிய ஆலமரம் 15 ஆண்டுகளுக்கு முன் நோய் தாக்கி கிளைகள் காய்ந்து வேறோடு சாய்ந்தது. அடுத்து ஆஞ்சநேயர் கோவில் முன் இருந்த பெரிய ஆலமரம் 2011ம் ஆண்டு விழுந்தது.தொடர்ந்து ராஜகிரி கோட்டைக்கு வெளியே இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் இருந்த மரமும் 7 ஆண்டுகளுக்கு முன் விழுந்தது.இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ராஜகிரி கோட்டையின் தரைப்பகுதியில் தர்பார் பகுதிக்கு அருகில் இருந்த பெரிய ஆலமரம் விழுந்தது.சில தினங்களுக்கு முன் ராஜகிரி கோட்டை உடற்பயிற்சி கூடத்திற்கு எதிரே இருந்த ஆலமரமும் வேரோடு சாய்ந்து விட்டது.இந்த மரங்கள் அனைத்தும் முதலில் கிளைகளில் நோய் தாக்கி பட்டு போன பின்பே வேரோடு சாய்கின்றன.ராஜகிரி கோட்டையின் தரைப் பகுதியில் உள்ள படர்ந்த ஆலமரங்களால் தரைப் பகுதி வெயில் படாமல் குளிர்ச்சியாக இருக்கும், பறவைகள், எழுப்பும் சத்தம், சிறுவர்கள் தொங்கி விளையாட ஆலம் விழுதுகள், பெரியவர்கள் ஓய்வு எடுக்கவும், உணவருந்தவும் ஏற்ற இடங்கள் என இங்குள்ள ரம்யமான சூழலே சுற்றுலா பயணிகளை கவர்ந்து மீண்டும் இங்கு வரவழைக்கிறது.தற்போது ஆலமரங்கள் ஒவ்வொன்றாக விழுந்து ராஜகிரி கோட்டை இயற்கை அழகை இழந்து வருகிறது. சில மாதங்களுக்கு முன் செஞ்சி கோட்டையில் கலெக்டர் மோகன் ஆய்வு செய்த போது இது குறித்து பொதுமக்கள் சார்பில் சுட்டிக் காட்டப்பட்டது.அவர், ஆலமரங்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கும் படி இந்திய தொல்லியல் துறை அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.

ஆனால், அதன் பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் போனதால் மேலும் ஒரு 200 ஆண்டு ஆலமரம் வேரோடு சாய்ந்து விட்டது. இது, செஞ்சி நகர மக்கள், சுற்றுலா பயணிகளுக்கு மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்த நிலை நீடித்தால் அடுத்த சில ஆண்டுகளில் எஞ்சியுள்ள மரங்களும் அழிந்து செஞ்சி கோட்டை தனது இயற்கை அழகை இழக்கும் அபாயம் உள்ளது.எனவே இந்திய தொல்லியல் துறையும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாக இங்குள்ள ஆலமரங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என செஞ்சி நகர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X