திருப்பூர்:மனைவியை சேர்த்து வைக்க வலியுறுத்தி, மொபைல் போன் டவரில் ஏறி வாலிபர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.ஈரோடு அடுத்த பவானியை சேர்ந்தவர் அருளரசன், 28; பனியன் தொழிலாளி. பிரிந்து சென்ற மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்க வலியுறுத்தி, ராயர்பாளையத்தில் உள்ள மொபைல் போன் டவரில் ஏறி, அருளரசன் நேற்று மாலை போராட்டத்தில் ஈடுபட்டார்.பல்லடம் போலீசார் அவரிடம் பேச்சு நடத்தினர். 150 அடி உயரமுள்ள டவரில், 60 அடி வரைக்கு ஏறி நின்று தொடர்ந்து கூச்சலிட்டார். அவரிடம் பேச்சு நடத்தி, சமாதானம் செய்து கீழே இறங்கி வர வைத்தனர்.