கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு வழியாக, கேரளாவுக்கு கூடுதல் கருங்கல் பாரம் ஏற்றி சென்ற இரு லாரிகள், செக்போஸ்ட்டில் பறிமுதல் செய்யப்பட்டன.கிணத்துக்கடவு பகுதியில் அமைந்துள்ள குவாரிகளில் இருந்து, அதிகளவு கருங்கல் வெட்டி எடுக்கப்படுகின்றன. 'டிப்பர்' லாரிகளில் அளவுக்கு அதிகமான பாரம் ஏற்றி கேரளாவுக்கு கடத்தப்படுவது அதிகரித்துள்ளது.கலெக்டர், சப் - கலெக்டர் ஆகியோர், அடிக்கடி எல்லையோர செக்போஸ்ட்களில் ஆய்வு நடத்தி, கண்காணிப்பையும், வாகன சோதனையையும் தீவிரப்படுத்தி வருகின்றனர். சமீபத்தில், செக்போஸ்ட்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு, கலெக்டர் அலுவலகத்தில் இருந்து கண்காணிக்கப்படுகிறது.ஆனாலும், கண்காணிப்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதால், கருங்கல் கடத்தல் அதிகரித்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.இந்நிலையில், நேற்று முன்தினம், வீரப்பகவுண்டனுார் செக்போஸ்ட் வழியாக, கேரளாவுக்கு கடத்தப்பட்ட கனிமவள லோடுடன் கூடிய இரு லாரிகள் பிடிபட்டன.விசாரணையில், லாரியில் கூடுதல் கருங்கல் பாரம் ஏற்றப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. லாரிகளில் உரிய ஆவணங்கள் இல்லை. இதனையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட லாரிகள், கிணத்துக்கடவு போலீஸ் ஸ்டேஷன் கொண்டு வரப்பட்டன.கனிம வளம் கடத்தல் தொடராமல் தடுக்க, மாவட்ட நிர்வாகமும், போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும், என, சமூக ஆர்வலர்களின் வலியுறுத்தியுள்ளனர்.