கோடை காலத்தில் கோழி வளர்ப்பில் கவனம்! கால்நடை துறை மருத்துவர்கள் 'அட்வைஸ்'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜன
2022
05:41

பொள்ளாச்சி;கோழி வளர்ப்பு கிராமப்புறங்களில் தொன்று தொட்டு வரும் தொழிலாகும். இதன் வாயிலாக, குறைந்த முதலீட்டில் விவசாயிகள் குறிப்பிடத்தக்க வருவாய் ஈட்டுகின்றனர்.கோடைக்காலத்தில், கோழி வளர்ப்பில் சவால்கள் அதிகம். கோடையில், பொள்ளாச்சி பகுதி கோழி வளர்ப்பாளர்கள் கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள் குறித்து கால்நடை பராமரிப்பு துறை அறிவுறுத்தியுள்ளது.கோழிகளை வெயில் காலங்களில் காலை அல்லது மாலை வேளைகளில் மட்டுமே மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டும். வெயில் நேரங்களில் நிழலான பகுதியில், அடைத்து வைத்து தீவனம் அளிக்க வேண்டும்.பண்ணையில் மின்விசிறியை பயன்படுத்தி காற்றோட்டம் ஏற்படுத்த வேண்டும். கோழி கொட்டகையின் பக்கச்சுவற்றில் ஈரமான சாக்கு பைகளை கட்டி வைக்கலாம். குழாய் வாயிலாக கூரை மேல் தண்ணீர் தெளிக்கலாம்.கோழிகளுக்கு தண்ணீர் தேவையை சரியான அளவில் பூர்த்தி செய்ய வேண்டும். குளிர்ச்சியான, சுத்தமான தண்ணீர் அளிக்க வேண்டும்.அதிக அளவு வெப்பத்தினால் பொட்டாசியம், மக்னீசியம் போன்ற தாது உப்புகளை கோழிகள் இழந்து விடும். எனவே இந்த சத்துக்கள் அடங்கிய எலக்ட்ரோலைட் பவுடரை கோழிகளுக்கு நீரில் கலந்து அளிக்க வேண்டும்.வைட்டமின் சி, பி, டி, ஏ, சத்துக்கள் அடங்கிய மருந்தை அரை மி.லி., என்ற அளவில் நுாறு கோழிகளுக்கு நீரில் கலந்து அளிக்க வேண்டும்.வைட்டமின் சி தேவைக்காக எலுமிச்சை சாற்றை நீரில் கலந்து அளிக்கலாம். பாலில் இருந்து கிடைக்கும் மோரையும் கோழிகளுக்கு அளிக்கலாம். அடர் தீவனத்தில் எரிசக்தியின் அளவை குறைத்து, புரதச்சத்து, அமினோ அமிலங்கள், கால்சியம் போன்ற தாது உப்புகளின் அளவை அதிகரித்து கொடுக்க வேண்டும்.ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை, ராணிகேட் நோயானது, சிறிய குஞ்சுகள் முதல் பெரிய கோழிகள் வரை தாக்க வாய்ப்புள்ளது. எனவே இதற்கு தடுப்பூசி அளிக்க வேண்டும். ராணிகேட் நோய்க்கு எதிராக, ஆர்.டி.எப்., அல்லது லசோட்டா தடுப்பூசியை, ஏழாவது நாளிலும், நான்காவது வாரத்திலும் கண் அல்லது மூக்கு வழியாக அளிக்க வேண்டும்.ஒன்பதாவது வாரத்தில் ஆர்.டி.வி.கே., என்ற தடுப்பூசி மருந்தை, அரை மில்லி என்ற அளவில் இறக்கை பட்டைக்கு கீழ் பகுதியில் அளிக்க வேண்டும்.அம்மை நோயால் பாதிக்கப்பட்ட கோழிகளின், மூக்கு, வாய், கண், இமை போன்ற பகுதிகளில் கட்டிகள் தோன்றும். இதனால் கண் பார்வை இழப்பு, சுவாசக்கோளாறு போன்றவை அதிகமாக ஏற்படும்.இந்த அம்மை நோய்க்கு எதிரான தடுப்பூசியை ஆறு வாரங்களுக்கு மேல் உள்ள கோழிகளுக்கு, அரை மில்லி என்ற அளவில் கோழியின் இறக்கைப்பட்டை பகுதியில் தோலுக்கு அடியில் இட வேண்டும்.இவ்வாறு, சரியான வளர்ப்பு முறைகளை பின்பற்றினால் மட்டுமே, கோழி வளர்ப்பில் நல்ல லாபம் பெற முடியும். கோழி இறப்பை தவிர்க்க முடியும். இவ்வாறு, கால்நடை பராமரிப்பு துறை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X