விக்கிரவாண்டி-விக்கிரவாண்டி அருகே கடத்திச் சென்ற எருமை மாடுகளை மீட்டு லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.சென்னையிலிருந்து ஒட்டன்சத்திரம் பகுதிக்கு கறி விற்பனைக்காக லாரியில் 36 எருமை மாடுகள் கடத்துவதாக பா.ஜ., ஆன்மிக மக்கள் கட்சி நிர்வாகி நிர்மலா, மயிலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டுரங்கன், சப் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் ஆகியோர் லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் எருமை மாடுகள் கடத்தியது தெரியவந்தது.இதையடுத்து எருமை மாடுகளை மீட்டு விக்கிரவாண்டிஅடுத்த வி சாலையில் உள்ள கால்நடை துயர் தடுப்பு கழகத்திடம் ஒப்படைத்தனர்.பின், போலீசார் வழக்குப் பதிந்து லாரியை விழுப்புரம் கோர்ட்டில் ஒப்படைத்தனர். கோர்ட் அபராதத்திற்கு பிறகு மீட்கப்பட்ட மாடுகளை மீண்டும் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்படும் என கால்நடை துயர் தடுப்புக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.