கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி மாவட்ட இளைஞர் நீதிக்குழும உறுப்பினர்கள் பதவிக்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.கலெக்டர் ஸ்ரீதர் செய்திக்குறிப்பு:கள்ளக்குறிச்சி மாவட்ட இளைஞர் நீதிக்குழும உறுப்பினர்கள் ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் என்ற விகிதத்தில் தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.குழந்தைகள் தொடர்பான உடல் நலம், கல்வி, குழந்தைகளுக்கான நலப்பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர்கள். குழந்தை உளவியல், சமூகவியல், மனித மேம்பாடு ஆகியவற்றில் ஏதேனும் பட்டம் பெற்ற தொழில் புரிபவர் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பதாரர்கள் நியமனத்தில் 35 வயதுக்கு குறையாமல் 65 வயதை பூர்த்தி செய்யாதவராக இருக்க வேண்டும். ஒரு குழுவில் அதிகபட்சமாக ஒரு நபர் இருமுறை மட்டுமே பதவி வகிக்க தகுதி உடையவர்களாவர்.ஆனால் தொடர்ந்து இருமுறை பதவி வகிக்க இயலாது. இதற்கான விண்ணப்ப படிவத்தினை விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.தகுதி வாய்ந்த நபர்கள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, எண்.156, சாரதாம்பாள் வீதி, நித்தியானந்தம் நகர், வழுதரெட்டி, விழுப்புரம் 605 401, என்ற முகவரியில் பெற்று விண்ணப்பிக்கலாம். மேலும், 04146-290659 என்ற தொலைபேசி எண்ணிலும், dcpuvpm1@gmail.com என்ற இணையதள முகவரியிலும் தொடர்பு கொண்டு கூடுதல் தகவல்களை அறியலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் சம்மந்தப்பட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.