விழுப்புரம்-தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி விழுப்புரம் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் நடந்தது.விழுப்புரத்தில் நடந்த கூட்டத்திற்கு, மாவட்ட தலைவர் தண்டபானி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் வளர்மதி முன்னிலை வகித்தார். செயலாளர் சண்முகசாமி வரவேற்றார். மாநில செயலாளர் கிறிஸ்டோபர் சிறப்புரையாற்றினார்.கூட்டத்தில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை வழங்க வேண்டும்.வெளிப்படையான பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி வரும் 21ம் தேதி மாநில அளவில், வட்டார கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.