தியாகதுருகம்-தியாகதுருகம் அடுத்த மடம் கிராமத்தில் கால்நடைகளுக்கான சிறப்பு சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது.ஒன்றிய சேர்மன் தாமோதரன் தலைமை தாங்கினார். துணைச் சேர்மன் நெடுஞ்செழியன் முன்னிலை வகித்தார். கால்நடை உதவி திட்ட இயக்குனர் பெரியசாமி வரவேற்றார். முகாமை மாவட்ட சேர்மன் புவனேஸ்வரி பெருமாள் துவக்கி வைத்து பேசினார்.முகாமில், கால்நடை மருத்துவர்கள் கால்நடைகளுக்கு பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். சிறந்த முறையில் கால்நடைகளை பராமரித்த உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் பெருமாள், ஒன்றிய கவுன்சிலர் கொளஞ்சி, வர்த்தக அணி அமைப்பாளர் நாகராஜ், ஊராட்சித் தலைவர் சுரேஷ், துணைத் தலைவர் சவீதா உட்பட பலர் பங்கேற்றனர்.