கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் குடிசைகள் இல்லா தமிழகம் திட்டத்தின்கீழ் அனைத்து குடிசை வீடுகள் கணக்கெடுக்கும் பணிக்கான பயிற்சி வகுப்பு நடந்தது.கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட அளவிலான முதன்மை பயிற்றுநர்களுக்கான பயிற்சிக் கூட்டத்திற்கு கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார்.அப்போது அவர் பேசியதாவது:குடிசைகள் இல்லா தமிழகம் திட்டம் 2010ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் தமிழகத்தில் உள்ள அனைத்து குடிசை வீடுகளும் கணக்கெடுக்கப்பட்டு குடிசை வீடுகள் அகற்றப்பட்டு புதிய வீடுகள் கட்டப்பட்டுள்ளது.இத்திட்டத்தின்கீழ் இந்த ஆண்டு, மீதமுள்ள குடிசை வீடுகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற உள்ளது. ஒன்றிய அளவில் இதற்கான பயிற்சி அளிக்கப்பட்டு, மாவட்ட ஊராட்சிகளில் கணக்கெடுக்கும் பணி நடைபெற உள்ளது.இவ்வாறு கலெக்டர் பேசினார்.கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குனர்கள் மணி தேவநாதன், கலெக்டர் நேர்முக உதவியாளர் (நிலங்கள்) ராஜவேல், ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் செல்வகுமரன் மற்றும் அனைத்து மண்டல அலுவலர்கள், பி.டி.ஓ.,க்கள் பங்கேற்றனர்.