கோவை:கோவை, செட்டிபாளையம் எல் அண்ட் டி பைபாஸ் சாலை மைதானத்தில் இன்று ஜல்லிக்கட்டு நடக்கிறது.கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடக்கும் இந்நிகழ்ச்சியில், 300 மாடுபிடி வீரர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர். மாட்டுடன் வருவோர், மாடுபிடி வீரர்கள் அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்றும், 48 மணி நேரத்துக்குள் எடுத்த கொரோனா சோதனை 'நெகட்டிவ்' சான்று வைத்திருக்க வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.இன்று காலை 6:30 மணிக்கு நடக்கும் நிகழ்ச்சியில், அமைச்சர் செந்தில் பாலாஜி ஜல்லிக்கட்டை தொடங்கி வைக்கிறார். நிகழ்ச்சியை நேரில் பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. நேரலை ஒளிபரப்பை பொதுமக்கள் கண்டு ரசிக்கலாம்.நிகழ்ச்சி, 'தினமலர்' இணையதளத்தில் நேரடி ஒளிபரப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.