கடலுார்-கடலுார் மாவட்டத்தில் 7 ஏரிகளில் மீன் வளர்க்க வரும் 28ம் தேதி பொது ஏலம் விடப்படுகிறது.இது குறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:கடலுார் மாவட்டம், மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் கட்டுப்பாட்டில் உள்ள தீவிர உள் நாட்டு மீன் வளர்ப்பு மற்றும் விற்பனைத் திட்டத்தின் கீழ் " 4 "அ பிரிவு ஏரிகள் மற்றும் "3 "ஆ பிரிவு ஏரிகள் 3 ஆண்டுகளுக்கு குத்தகை அடிப்படையில் மூடி முத்திரையிடப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகள் 28ம் தேதி காலை 12 மணி வரை கடலுார், மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் வரவேற்கப்படுகிறது.அதன்படி கடலுார் வட்டத்தில் உள்ள மேலக்கொளக்குடி ஏரி, பெருமாள் ஏரி, சிதம்பரம் வட்டத்திலுள்ள சூடாமணி ஏரி, வாலாஜா ஏரி, பண்ருட்டி வட்டத்திலுள்ள சேமக்கோட்டை ஏரி, விருத்தாசலம் வட்டத்திலுள்ள தர்மநல்லுார் ஏரி, கார்கூடல் ஏரி ஆகிய ஏரிகளுக்கு மூடி முத்திரையிடப்பட்ட ஒப்பந்தப்புள்ளி அளித்து, பொது ஏலம் மூலம் 28ம் தேதி மதியம் 2.30 மணியளவில் குத்தகைக்கு விப்படவுள்ளது.மீன் வளர்ப்பில் ஆர்வம் உள்ள நபர்கள் மீன்பாசி குத்தகை நிபந்தனைகள் மற்றும் விண்ணப்பங்களை உரிய கட்டணம் செலுத்தி, கடலுார் முதுநகரில் இயங்கி வரும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.