சேத்தியாத்தோப்பு-சேத்தியாத்தோப்பு அடுத்த வடக்குப்பாளையம் - கீழ்பாதி சாலை ஜல்லி பெயர்ந்துள்ளாதால் நடந்து செல்ல முடியாமல் மாணவர்கள் அவதியடைந்து வருகின்றனர்.சேத்தியாத்தோப்பு அடுத்த வடக்குப்பாளையம் மெயின்ரோட்டிலிருந்து கீழ்பாதி வரை 2 கி.மீ., துாரம் வரை சாலை உள்ளது. இந்த சாலையில் துாய இருதய மேல் நிலைப் பள்ளிக்கு மாணவ, மாணவிகள் சென்று வருகின்றனர். தார் சாலை போடப்பட்டு 15 ஆண்டுகளுக்கும் மேலானதால் தற்போது ஜல்லி பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் சைக்கிள் மற்றும் நடந்து செல்லும் மாணவர்கள் பெரிதும் பாதிக்கின்றனர். புதிய தார்சாலை அமைத்து தர ஊராட்சி நிர்வாகம், ஸ்ரீமுஷ்ணம் ஒன்றிய அதிகாரிகளிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தும் எந்த பலனும் அளிக்கவில்லை. புதிய தார்சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.