நடுவீரப்பட்டு-சி.என்.பாளையம் சொக்கநாதன்பேட்டையில் சாலையில் கழிவுநீர் தேங்குவதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.சி.என்.பாளையம் ஊராட்சியில் சொக்கநாதன்பேட்டையில் சாலையோரம் கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டுள்ளது. இந்த கால்வாய்கள் சாலை ஆக்கிரமிப்பு மற்றும் மணலால் மூடப்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் ஓட வழியின்றி சாலையில் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் தொற்று பரவும் அபாயம் உள்ளது. இந்த கால்வாய்களில் உள்ள மணலை அகற்றினாலும் மீண்டும் மழையால் துார்ந்து விடுகின்றன. கால்வாய்களில் கழிவுநீர் விடுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.