புவனகிரி-மேல்புவனகிரி ஒன்றியம், நத்தமேட்டில் பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ள அரசு கட்டடங்களை இடித்து அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேல்புவனகிரி ஒன்றியம், நத்தமேட்டில் ஊராட்சி அலுவலகம், சமுதாயக்கூடம், பள்ளி கட்டங்கள், அங்கன்வாடி மையங்கள், ரேஷன் கடைகள், மேல்நிலை குடிநீர் தேக்கத்தொட்டி உள்ளிட்ட பல கட்டடங்கள் ஒரே இடத்தில் உள்ளது. தற்போது பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ள அங்கன்வாடி மையம், ரேஷன் கடை, குடிநீர்த்தொட்டிகள் பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக அச்சத்துடன் செல்லும் அவலம் நீடிக்கிறது. பழுதடைந்த கட்டங்களை இடிக்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.