புவனகிரி-புவனகிரி-குறிஞ்சிப்பாடி சாலை விரிவாக்கத்திற்காக தோண்டிய பள்ளம், சரி செய்யாமல் பணிகளை கிடப்பில் போட்டதால் அடிக்கடி போக்குவரத்து பாதித்து விபத்து ஏற்படுகிறது. புவனகிரியில் இருந்து சாத்தப்பாடி, சொக்கன் கொல்லை, பொன்வெளி, குறிஞ்சிப்பாடி வழியாக வடலுார் மற்றும் நெய்வேலி செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை விரிவாக்கப் பணியை நெடுஞ்சாலைத்துறை சார்பில் துவக்கினர். அதற்காக சாலையின் இரு பக்கத்திற்கு பள்ளம் தோண்டினர். கிராவல் கொட்டி சரி செய்து தார் சாலை அமைத்து வருகின்றனர். இதில் சாத்தப்பாடி சாலையில் சித்தேரி அருகில் பள்ளம் தோண்டி, ஒன்றரை ஜல்லிக் கொட்டி சரி செய்யாமல் கிடப்பில் போட்டுள்ளனர். இதனால் இந்த சாலையில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. வீடுகளுக்கு முன் சாலையில் தோண்டிய பள்ளத்தால் வீட்டிற்கு செல்ல முடியாத அவலம் ஏற்பட்டுள்ளது. சாலையை விரைந்து சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.