புதுச்சத்திரம்-புதுச்சத்திரம் அடுத்த சேந்திரக்கிள்ளையில் தார் சாலை போடும் பணி துவங்கியுள்ளது.புதுச்சத்திரம் அடுத்த சேந்திரக்கிள்ளை மேலவாய்க்கால் செல்வதற்கு இணைப்பு சாலை பழுதடைந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் இருந்தது. இந்த சாலை வழியாக விவசாயிகள் நிலங்களுக்கு இடுபொருட்கள் எடுத்துச் செல்ல முடியாமல் அவதியடைந்தனர். சாலையை சீரமைக்க அரசுக்கு வைத்த கோரிக்கையையொட்டி, 2019 - 20 ம் ஆண்டு எஸ்.சி.பி.ஏ.ஆர்., திட்டத்தில் ரூ. 27.90 லட்சம் மதிப்பில், 978 மீட்டர் அளவிற்கு சாலை சீரமைத்து தார்சாலை போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.