நுங்கம்பாக்கம்--கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில், புதிதாக சாலை அமைக்கும் பணி அரைகுறையாக விடப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தேனாம்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில், கோடம்பாக்கம் நெடுஞ்சாலையை மில்லிங் செய்து, புதிய சாலை அமைக்கும் பணியை, நெடுஞ்சாலைத் துறையினர் மேற்கொண்டனர்.இதில், வள்ளுவர்கோட்டத்திலிருந்து அண்ணாசாலை நோக்கி செல்லும் சாலையை மட்டும் புதுப்பிக்கப்பட்டு, மறுபுறம் உள்ள சாலை கண்டுகொள்ளாமல் விடப்பட்டுள்ளது. சாலை மில்லிங் செய்யப்பட்டுள்ளதால், அவ்வழியே செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், அடிக்கடி விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.எனவே, அரைகுறையாக விடப்பட்டுள்ள சாலை பணிகளை, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் விரைந்து முடிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.