ஒரு மாதத்திற்குள் வாடகை பாக்கி அண்ணா நகர் கிளப்பிற்கு உத்தரவு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜன
2022
06:45

சென்னை--வீட்டு வசதி வாரியம் நிர்ணயிக்கும் வாடகை பாக்கி தொகையை, ஒரு மாதத்திற்குள் செலுத்த அண்ணா நகர் கிளப்பிற்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை அண்ணா நகர் கிளப் செயலர் ரவிச்சந்திரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய நிலத்தில், அண்ணா நகர் கிளப் செயல்பட்டு வருகிறது. அதில், மதுபான கூடத்திற்கு அனுமதி வழங்க கோரி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திடம், கிளப் சார்பில் மனு அளிக்கப்பட்டது.இதற்கு, நிலுவை வாடகை பாக்கியை முதலில் செலுத்த, வீட்டு வசதி வாரியம் பதில் கடிதம் அனுப்பியது. நிலுவை தொகை 52 லட்சத்து 25 ஆயிரத்து 960 ரூபாயில், 20 லட்சம் ரூபாய் ஏற்கனவே செலுத்தப்பட்டு விட்டது.இருப்பினும், மீத தொகையை செலுத்துமாறு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் கடிதம் அனுப்பியுள்ளது. அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டது.மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவு:தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான இடத்தில் கிளப் செயல்படுகிறது. அதனால், அதன் விதிகளை பின்பற்ற வேண்டும். விதிகளை மீறி, மனுதாரர் எந்த அனுமதியும் கோர முடியாது.விதிகளை மீறி செயல்படுவது கண்டறியப்பட்டால் கிளப்பை அப்புறப்படுத்தலாம். பார் செயல்படுவதற்கு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் அனுமதி அளிக்க, சட்டத்தில் இடமில்லை. மேலும், ஏழு கிரவுண்ட் பரப்பளவில் செயல்பட்டு வரும் கிளப்பிற்கு, மாத வாடகையாக 20 ஆயிரம் ரூபாய் மட்டும் வசூலிக்கப்படுகிறது.தற்போதைய சந்தை மதிப்பின் படி, தகுந்த வாடகையை நிர்ணயிக்க, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், தமிழக அரசுக்கு சொந்தமானது. அதற்கு ஏற்படும் வருவாய் இழப்பு, தமிழக அரசுக்கான வருவாய் இழப்பு. நியாயமான வாடகையை நிர்ணயித்தும், நிலுவை வாடகை தொகையை கணக்கிட்டும் 30 நாட்களில் கிளப் நிர்வாகத்திற்கு, வீட்டு வசதி வாரியம் அனுப்ப வேண்டும்.அந்த கடிதம் கிடைத்தது முதல், நான்கு வாரங்களுக்குள் நிலுவை தொகையை கிளப் நிர்வாகம் செலுத்த வேண்டும்.செலுத்த தவறினால், கிளப்பை காலி செய்வது, நிலுவை தொகை மற்றும் அபராதம் வசூலிக்க நடவடிக்கை எடுக்கலாம். வழக்கு முடித்து வைக்கப்படுகிறது.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X