திருவாலங்காடு--களாம்பாக்கம் ஊராட்சியில், கழிவு நீர் பாதையில் குப்பை கொட்டப்பட்டு உள்ளதால், துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளதாக, மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.பேரம்பாக்கம் -- திருவாலங்காடு சாலையில், களாம்பாக்கம் ஊராட்சி காலனி பகுதியில் சேகரமாகும் குப்பை, கழிவு நீர் செல்லும் பகுதியில் கொட்டப்பட்டுள்ளது.தற்போது வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர், குப்பையுடன் கலப்பதால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக, மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.இதுகுறித்து, ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.