மணவாள நகர்-மணவாள நகர் பகுதியில் மூன்று வீடுகளில் திருட்டு நடந்தது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.கடம்பத்துார் ஒன்றியம், வெங்கத்துார் ஊராட்சி, மணவாள நகர் பகுதியில் உள்ள கருணாநதி தெருவில் வசித்து வருபவர் பாரதி மோகன், ௩௬. தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இவர், குடும்பத்துடன், சில தினங்களுக்கு முன், சொந்த ஊரான நாகப்பட்டினம் சென்று விட்டு, நேற்று முன்தினம் காலை வீட்டிற்கு திரும்பியுள்ளார். பின், நேற்றுமுன்தினம் இரவு நகை, பணத்தை வீட்டின் அலமாரியில் வைத்து விட்டு துாங்கியுள்ளார். நேற்று காலை எழுந்து பார்த்தபோது நான்கு சவரன் நகை மற்றும் 3,000 ரூபாய் பணம் திருடு போனது தெரிந்தது.இதேபோல், வீட்டின் அருகில் வசித்து வரும் ராஜன், 43, என்பவரது வீட்டில், மூன்று மொபைல்போன்கள் மற்றும் மற்றொரு வீட்டில், இரண்டு மொபைல்போன்கள் திருடப்பட்டு உள்ளது.மணவாள நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.