திருத்தணி-திருத்தணி போலீஸ் சட்டம் - ஒழுங்கு புதிய இன்ஸ்பெக்டராக ஏழுமலை நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.திருத்தணி காவல் நிலைய சட்டம் - ஒழுங்கு இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த ரமேஷ், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் காவல் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.இதையடுத்து, திருத்தணி போலீஸ் சட்டம் - ஒழுங்கு புதிய இன்ஸ்பெக்டராக ஏழுமலை நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.இவர், செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி, தற்போது பணி மாறுதல் பெற்று வந்தார் என்பது குறிப்பிடதக்கது.