நகரி--சித்துார் மாவட்டம், கே.வி.பள்ளி அடுத்த, மூலகொத்தப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ரமணா, 50; நேற்று முன்தினம், ரமணா மற்றும் அவரது குடும்பத்தினர் ஆட்டோவில் திருப்பதிக்கு சென்று கொண்டிருந்தனர்.திருப்பதி, மதனப்பள்ளி சாலையில், பாக்கராபேட்டை கணவாய் அருகே சென்றபோது, ஆட்டோ மீது, ஆர்.டி.சி., பஸ் மோதியது.இதில், ரமணா, அவரது மனைவி தனலட்சுமி, ஆட்டோ டிரைவர் சிவய்யா, ரமணாவின் மகள்கள் கீர்த்தி, மணிஷா, மாமியார் நாகம்மாள், 68, ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர்.காயம் அடைந்தவர்கள் திருப்பதி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமிக்கப்பட்டனர். அங்கு நாகம்மாள் இறந்தார். மற்றவர்கள் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.