வேடசந்தூர் : குடகனாறு அணையில் இருந்து 2 கிளை வாய்க்கால்கள் மூலம் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது.
வேடசந்தூர் அருகே அழகாபுரியில் குடகனாறு அணை உள்ளது. 27 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் தற்போது 23.5 அடி தண்ணீர் தேங்கியுள்ளது. இந்த அணையில் இருந்து இரண்டு கிளை வாய்க்கால்கள் மூலம் திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் 9 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது.பாசனத்திற்கான தண்ணீரை வேடசந்தூர் காந்திராஜன் எம்.எல்.ஏ., நேற்று திறந்து வைத்தார். வலது பிரதான கால்வாயில் வினாடிக்கு 54 கனஅடி நீரும், இடது பிரதான கால்வாயில் வினாடிக்கு 16 கன அடி தண்ணீரும் ஒரு வாரம் விட்டு, ஒரு வாரம் என மொத்தம் 90 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.விழாவில் செயற்பொறியாளர் கோபி, உதவி பொறியாளர் முருகன், தி.மு.க., நிர்வாகிகள் கவிதா, கார்த்திகேயன், மணிமாறன், முத்துக்கிருஷ்ணன் பங்கேற்றனர்.