நகரி--கால்வாயில் தவறி விழுந்த பெண், நீரில் மூழ்கி இறந்தார்.சித்துார் மாவட்டம், ஐராலா அடுத்த, கோவிந்தரெட்டிபள்ளி பகுதியை சேர்ந்தவர் சித்தய்யா மனைவி எல்லம்மாள், 35. இவருக்கு மூச்சு திணறல் மற்றும் வலிப்பு நோய் இருந்து வந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் மருத்துவமனை சென்றுவிட்டு, ஒத்தபள்ளி அருகே உள்ள கால்வாய் ஒன்றை கடக்கும்போது, அதில் தவறி விழுந்தார்.தண்ணீரில் மூழ்கி மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்தார். ஐராலா போலீசார் விசாரிக்கின்றனர்.