திண்டுக்கல் : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி திண்டுக்கல்லில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு என 87 தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 3 நகராட்சிகள், 23 பேரூராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. இதற்காக, திண்டுக்கல் மாநகராட்சியில் 183, ஒட்டன்சத்திரத்தில் 34, பழநியில் 71, கொடைக்கானலில் 38, பேரூராட்சிகளில் 421 என மொத்தம் 747 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளது.இன்று அல்லது நாளை (ஜன.22) தேர்தல் அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது. தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அதிகாரிகள், கல்வி அலுவலர்களின் பட்டியல் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளது. மாநகராட்சிக்கு ஒரு தேர்தல் அலுவலர், 5 உதவி தேர்தல் அலுவலர், நகராட்சிகளுக்கு தலா ஒரு தேர்தல் அலுவலர், 3 உதவி அலுவலர்கள், 23 பேரூராட்சிகளுக்கு தலா ஒரு தேர்தல் அலுவலர், 2 உதவி அலுவலர்கள் என மொத்தம் 87 தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.