கம்பம் : முகக் கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கும் பணியில் நகராட்சி அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தவும், வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அரசு உத்தரவிட்டுள்ளது. கம்பம் நகராட்சி கமிஷனர் பாலமுருகன், பொறியாளர் பன்னீர் தலைமையிலான நகராட்சி பணியாளர்கள் மெயின் ரோடு, தாத்தப்பன்குளம்,கம்பம்மெட்டு ரோடு, பாரதியார் நகர், பெண்கள் மேல்நிலைப்பள்ளி தெரு, உழவர் சந்தை வீதி, வேலப்பர் கோயில் வீதிகளில் நேற்று ஆய்வு செய்து முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்தனர். சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது, பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்ப்பது போன்ற விஷயங்கள் குறித்து விழிப்புணர்வும் மேற்கொள்ளப்பட்டன.