மாவட்டத்தில் கால்நடைகளுக்கு சிகிச்சை கிடைப்பதில்... சிக்கல்! மருத்துவமனை, மருந்தகங்களில் மருத்துவர்கள் பற்றாக்குறை | திருவள்ளூர் செய்திகள் | Dinamalar
மாவட்டத்தில் கால்நடைகளுக்கு சிகிச்சை கிடைப்பதில்... சிக்கல்! மருத்துவமனை, மருந்தகங்களில் மருத்துவர்கள் பற்றாக்குறை
Added : ஜன 21, 2022 | |
Advertisement
 
Latest district News

திருத்தணி-திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கால்நடை மருத்துவமனை, மருந்தகங்களில், உதவி மருத்துவர்கள்,ஆய்வாளர்கள் மற்றும் உதவியாளர்கள் பற்றாக்குறையால் விவசாயிகள் குறித்த நேரத்தில் தங்களது கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.இதனால் பல விவசாயிகள் மாடுகள் இறக்கவும் நேரிடுகிறது எனவிவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.திருவள்ளூர் மாவட்டத்தில், திருத்தணி, திருவள்ளூர், பொன்னேரி மற்றும் அம்பத்துார் ஆகிய இடங்களில் கால்நடை துறையின் உதவி இயக்குனர் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.மாவட்டத்தில் 1.50 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளிடம் கால்நடைகள் வளர்ந்தும் பராமரித்து வருகின்றனர்.அந்த வகையில் 2019ம் ஆண்டு, 20வது கால்நடை கணக்கெடுப்பின்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் 2.74 லட்சம் கறவை பசுக்கள் மற்றும் மாடுகள், 56 ஆயிரம் எருமைகள் என, மொத்தம் 3.30 லட்சம் மாடுகள் உள்ளன.மருத்துவ முகாம்கள்மேலும், 74,780 செம்மறி ஆடுகள், 1,87,984 வெள்ளாடுகள் என மொத்தம், 2,62,780 ஆடுகள், 3.32 லட்சம் கோழிகள், 61,770 செல்லப் பிராணிகள் உள்ளன.இவைகளுக்கு, ஐந்து கால்நடை மருத்துவமனை, 90 கால்நடை மருந்தகம், 31 கிளை நிலையங்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது.மேலும், ஆண்டுக்கு இரு முறை கால்நடைகளுக்கு நோய் தடுப்பு ஊசிகள் மற்றும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது.இதுதவிர, காலை 8:00 மணி முதல், மதியம் 12:00 வரையும், மாலை 3:00 மணி முதல், மாலை 5:00 மணி வரையும் தினமும் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.கால்நடை மருந்தகத்திற்கு, ஒரு உதவி மருத்துவர், ஒரு ஆய்வாளர், ஒரு உதவியாளர் என மூன்று பேரும், கிளை நிலையத்திற்கு ஒரு ஆய்வாளர் வீதம் நியமிக்கப்பட்டு கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.ஆனால், ஒரு ஆண்டுக்கு மேலாக, 32 மருத்துவர்கள், 12 ஆய்வாளர்கள், 39 உதவியாளர்கள் ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளன.இதனால் விவசாயிகள் தங்களது கால்நடைகளுக்கு வரும் நோய்க்கு உரிய நேரத்தில் சிகிச்சை பெற முடியாமல் கால்நடைகள் உயிரிழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.கொள்கை முடிவுசில விவசாயிகள், ஓய்வு பெற்ற கால்நடை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களை அடையாளம் கண்டுபிடித்து, பணம் கொடுத்து கால்நடைகளை சிகிச்சை அளிக்கின்றனர்.கடந்த 2012 ஆண்டிற்கு பின், கால்நடை துறையில் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் பணியிடங்களை இதுவரை நிரப்பப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது.

இது குறித்து மாவட்ட கால்நடை துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ''மாவட்டத்தில் காலியாக உள்ள மருத்துவர், ஆய்வாளர் மற்றும் உதவியாளர் பணியிடம் குறித்து, எங்களின் உயரதிகாரிகளுக்கும், மாவட்ட நிர்வாகத்திடம் மாதந்தோறும் தகவல் அனுப்பி வைக்கிறோம்.''காலி பணியிடங்களை நிரப்புவதற்கு அரசின் கொள்கை முடிவாகும்,'' என்றார்.பேனர்மாவட்டத்தில் காலி பணியிட விபரம்கோட்டம் மொத்த மருத்துவர் காலியிடம் மொத்த ஆய்வாளர் காலியிடம் மொத்த உதவியாளர் காலியிடம்திருத்தணி 23 19 29 2 23 19அம்பத்துார் 11 0 16 0 13 2பொன்னேரி 21 3 25 7 21 12திருவள்ளூர் 34 10 45 3 34 6மொத்தம் ௮௯ ௩௨ ௧௧௫ ௧௨ ௯௧ ௩௯நீதிமன்றத்தில் வழக்குகால்நடை துறையில் காலியாக உதவியாளர் பணிக்கு 2015ம் ஆண்டு விண்ணப்பம் பெற்று நேர்காணல் நடந்தது.

அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டத்தில் காலியாக உள்ள, 34 உதவியாளர்களுக்கு, 6,150 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களை நேர்காணலுக்கு கடிதம் அனுப்பிய நிலையில் நீதிமன்ற வழக்கால், தள்ளி வைக்கப்பட்டது. அதே விண்ணப்பதாரர்களுக்கு 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நேர்காணல் அறிவிக்கப்பட்டது. அப்போது சட்டசபை தேர்தலால் தள்ளிப் போனது. கடந்த மாதம் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டது.கொரோனா தொற்று காரணமாக இம்முறை நேர்காணல் ஒத்தி வைக்கப்பட்டது. அதே போல், ஆய்வாளர் பணியிடத்திற்கு 2018ம் ஆண்டு போட்டி தேர்வின் மூலம் தேர்வு செய்ய விண்ணப்பம் வழங்கப்பட்டது. தேர்வுக்கு ஹால் டிக்கெட் வந்தும், நீதிமன்ற வழக்கால் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது.கால்நடை மருத்துவர்கள், தமிழ்நாடு தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டு, நேர்காணல் கடிதம் அனுப்பிய நிலையில், நீதிமன்ற வழக்கால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.மருந்தகம் திறப்பதில்லை

பத்து ஆண்டுகளுக்கு மேலாக, பத்துக்கும் மேற்பட்ட மாடுகள் மற்றும் ஆடுகளை வளர்ந்து வருகிறேன். கறவை மாடுகளுக்கு தடுப்பு ஊசிகள் மற்றும் மாடுகள் நோயால் பாதிக்கப்பட்டால் அருகில் உள்ள கால்நடை மருந்தகத்திற்கு ஓட்டிச் செல்வோம். ஆனால் மருத்துவர், ஆய்வாளர் பற்றாக்குறையால் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தும், மருந்து மாத்திரைகள் வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. ஒரே மருத்துவர் இரண்டு, மூன்று கால்நடை மருந்தகங்களுக்கு செல்வதால், தினசரி கால்நடை மருந்தகம் திறப்பதில் சிக்கல் உள்ளது.ஜி. விஸ்வநாதன், 52, விவசாயி, லட்சுமாபுரம்.

 

Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X