தேனி : ''விதை ஈரப்பதம் அதிகரித்தால் முளைப்பு திறன் குறையும்,'' என விதை பரிசோதனை அலுவலர் மகாலட்சுமி, வேளாண் அலுவலர் சத்தியா கூறியுள்ளனர்.
அவர்கள் கூறியுள்ளதாவது:நெல் விதைக்கு 13 சதவீதம் ஈரப்பதம் அவசியம். இதேபோல் சிறுதானியம் 12, பருத்தி, வெண்டைக்கு 10, பயறுவகை, எண்ணெய் வித்துகளுக்கு 9, கீரை, தக்காளி, கத்தரி, மிளகாய்க்கு 8, பாகல், சுரை, பீர்க்கை, புடலை, வெள்ளரி, தர்ப்பூசணி, பூசணி விதைகளுக்கு 7 சதவீதம் ஈரப்பதம் வேண்டும். நிர்ணயிக்கப்பட்டதை விட விதை ஈரப்பதம் அதிகரித்தால் முளைப்பு திறன் குறையும்.
ஈரப்பதம் சரியாக இருந்தால் சேமிப்பின் போதும் விதையை பூச்சி நோய் தாக்குதலின்றி நீண்டகாலம் தரமாக இருக்கும். விவசாயிகள் விதை ஈரப்பதத்தை அறிந்து கொள்வது அவசியம். 100 கிராம் விதையை காற்றுப்புகாத பாலிதீன் கவரில் இட்டு பயிர், ரகம், விதைக்குவியல் விபரத்துடன் தேனி விதைப்பரிசோதனை நிலையம் வந்தால் விவசாயிகள் விதை ஈரப்பதத்தை அறிந்து கொள்ளலாம், என்றனர்.