பூஸ்டர் தடுப்பூசி முகாம் | தேனி செய்திகள் | Dinamalar
பூஸ்டர் தடுப்பூசி முகாம்
Added : ஜன 21, 2022 | |
Advertisement
 

தேனி: தேனி மாவட்டத்தில் நேற்றைய தடுப்பூசி முகாமில் கலெ க்டர் முரளீதரன் உள்பட 343 பேர் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.



மாவட்டத்தில் 2ம் தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதம் கடந்தவர்கள் பூஸ்டர் தடுப்பூசிக்கு தகுதியானவர்கள். அந்த வகையில் 15,098 மருத்துவ பணியாளர்கள், 18,224 முன்கள பணியாளர்கள், 60 வயது கடந்த இணைநோய் உள்ள 33,954 பேர் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம். நேற்று ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக்கல்லுரி மருத்துவமனைகளிலும் பூஸ்டர் தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது. தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் கலெக்டர் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி முகாமை துவக்கி வைத்தார். நேற்று ஒரேநாளில் 343 பேர் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X