எழுமலை : எழுமலையில் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்த நாளை முன்னிட்டு அ.தி.மு.க., சார்பில் முன்னாள் அமைச்சர் உதயகுமார், உசிலம்பட்டி எம்.எல்.ஏ., அய்யப்பன் மற்றும் நிர்வாகிகள் பல்வேறு வார்டுகளில் கொடி ஏற்றினர்.
பின் உதயகுமார் கூறியதாவது: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பெறும். குடியரசு தின அணிவகுப்பில் தமிழகத்தின் அலங்கார ஊர்திகள் நிராகரிக்கப்பட்ட விவகாரத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், குழு ஆய்வு செய்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என விளக்கமளித்துள்ளார். ஆய்வு குழுவிடம் தமிழர்களின் கலாசாரம், பண்பாட்டை எடுத்துரைத்ததில் தோல்வி அடைந்து விட்டோமோ என்ற ஐயம் எழுந்துள்ளது.
முதல்வர் ஸ்டாலின் தமிழ் இனம், தமிழ் மொழி என முழங்க மட்டுமே செய்கிறார். அவர் இந்த விவகாரத்தில் பிரதமரிடம் அழுத்தம் கொடுத்து முறையாக விளக்கம் அளித்திருந்தால் வெற்றி கிடைத்து இருக்குமோ என எண்ணத்தோன்றுகிறது என்றார்.