வாழைப்பழத்திற்கு விலை நிர்ணயிக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜன
2022
07:21

மதுரை: மதுரையில் வேளாண் ஒழுங்கு முறை மற்றும் விற்பனை நிலையத்தின் மூலம் தேங்காய்க்கு உரிய விலை நிர்ணயித்து ஏலம் விடுவதால், விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கிறது. வாழைப்பழத்திற்கும் மாவட்ட நிர்வாகம் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

இம்மாவட்டத்தில் சோழவந்தான், திருப்பரங்குன்றம், மேலுார், கொட்டாம்பட்டி, வாடிப்பட்டியில் 3000 எக்டேரில் நாட்டு வாழை, பூவன், ரஸ்தாளி, கற்பூரவள்ளி ரகங்கள் பயிரிடப்படுகின்றன. அறுவடையின் போது தார் கணக்கில் வியாபாரிகள் விலை கேட்கின்றனர்.

பழத்திற்கு அல்லது எடை கணக்கில் பணம் தருவதில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.செல்லம்பட்டி வாழை விவசாயிகள் கூறியதாவது: மதுரையில் யானைக்கல், ஓபுளா படித்துறை அருகே மொத்த விலை கடையில் வாழைத்தாரின் உயரத்தை வைத்து ஏலம் விடுகின்றனர்.

எவ்வளவு பெரிய தாராக இருந்தாலும் ரூ.150க்கு மேல் விலை கிடைப்பதில்லை. 100 பழங்கள் இருந்தால் ரூ.100 அல்லது ரூ.80க்கு ஏலம் கேட்கின்றனர். நட்டு அறுவடை செய்யும் வரை ஒரு வாழைத்தாருக்கு ரூ.80 வரை செலவாகிறது. பழத்தை வாங்கும் வியாபாரிகள் பழுக்கவைத்து பழம் ஒன்று ரூ.5 அல்லது ரூ.6க்கு விற்கின்றனர்.

ஓராண்டு காத்திருந்த எங்களுக்கு ஒரு பழத்திற்கு ஒரு ரூபாய் லாபம் என்றால் வியாபாரிக்கு ஒரே நாளில் ஒரு பழத்திற்கு ரூ.5 லாபம். இதுகுறித்து கலெக்டரிடம் எடை கணக்கில் விற்பனையை கொண்டு வர வலியுறுத்தினோம். வியாபாரிகள் எதிர்ப்பால் இரண்டாண்டுகளாக கோரிக்கை கிடப்பில் உள்ளது.

சூப்பர் மார்க்கெட், பரவை மார்க்கெட்டில் ஒரு சில கடைகளில் வாழைப்பழங்கள் எடை கணக்கில் விற்கப்படுகின்றன. எடை கணக்கில் வாங்கினால் தான் வியாபாரத்துக்கு அனுமதி என உத்தரவிட்டால் மட்டுமே உரிய விலை கிடைக்கும் என்றனர்.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
22-ஜன-202206:57:44 IST Report Abuse
அப்புசாமி வாழை விவசாயிகளே பழத்தையும் சில்லறையில் விற்க ஒரு சிண்டிகேட் அமைத்துக் கொள்ளலாமே... வேளாண் மசோதா வெச்சு வித்தா , வியாபாரிகள் செய்வதை கார்ப்பரேட்கள் செய்வார்கள்.
Rate this:
Cancel
21-ஜன-202209:50:13 IST Report Abuse
வீரா வியாபாரி இடைத்தரகர் என்று சொல்லாமல் அவர்களையும் விவசாயி என்றே கூறி மோடியையும் வேளாண் சட்டத்தையும் எதிர்பவர்களின் லட்சணம் இதுதான்.உண்மையான விவசாயி வாழ்க்கையுடனும் இயற்கையுடனும் போராடி கொண்டிருக்க இடைத்தரகர்கள் வியாபாரிகளிடமும் வசூலையும் விவசாயிடம் கொள்ளயும் அடித்து டெல்லி தெருக்களில் நாடகம் நடத்துவார்கள். இவர்களை கம்யூனிஸ்ட் தலைவர்களுக்கு நன்கு தெரியும் ஆனால் அப்பாவி தொண்டர்களுக்கு புரியவே புரியாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X