பாலமேடு : பாலமேடு கிராம பொது மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டி சார்பில் குரு பூஜை விழா நடந்தது.கலசங்களுக்கு அபிஷேகம், விநாயகர் கோயிலில் தீபாராதனை நடந்தது. ஓசை மடத்தில் மகாலிங்க சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது. சாதுக்களுக்கு சொர்ண தானம், வஸ்திர தானம், அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கமிட்டி தலைவர் மலைச்சாமி, செயலாளர் பிரபு, பொருளாளர் ஜோதிதங்கமணி உள்ளிட்டோர் செய்தனர்.