பாலுார்--பாலுார் அருகே, சாலையின் சிறு தரைப்பாலத்தின் நடுவே, பள்ளம் ஏற்பட்டுள்ளதால், வாகனங்களை இயக்குவதில் ஓட்டுனர்களுக்கு சிரமம் ஏற்பட்டு உள்ளது.பாலுார் அடுத்த மேல்மணப்பாக்கம், மேலச்சேரி கிராமங்களில் 2,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இரு கிராமங்களையும் இணைக்கும், சிறு தரைப்பாலம், சாலையின் குறுக்கே உள்ளது.இந்த பாலத்தின் நடுப்பகுதி உடைந்து, பெரிய பள்ளம் ஏற்பட்டது. இதை யாரும் சீரமைக்காததால், பள்ளத்தில் செடிகள் முளைத்துள்ளன.இச்சாலையில் வாகனங்களை இயக்கும் ஓட்டுனர்கள், இந்த பள்ளத்தால் மிகவும் சிரமப்படுகின்றனர். இதன் அருகில் அரசு நடுநிலைப் பள்ளி இருப்பதால், நடந்தும், சைக்கிளிலும் செல்லும் மாணவர்கள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.ஊராட்சி நிர்வாகம், இப்பாலத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.