மேலுார் : டில்லி குடியரசு தின விழா ஊர்வலத்தில் தமிழக ஊர்திக்கு அனுமதியளிக்க வலியுறுத்தி மேலூர் பஸ் ஸ்டாண்ட் முன் இந்திய கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தாலுகா செயலாளர் மெய்யர் தலைமை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர்கள் பெரியார், திலகர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் காளிதாஸ் பேசினார். நகர் செயலாளர் செல்வம் நன்றி கூறினார்.