மதுரை, : டில்லி குடியரசு தின விழா ஊர்வலத்தில் தமிழக ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து பா.பி., சார்பில் மதுரை கோச்சடை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
முன்னாள் எம்.எல்.ஏ., கதிரவன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சிவபாண்டியன், மாநில செயலாளர் பசும்பொன், தொழிற்சங்க செயலாளர் திருப்பதி, உசிலம்பட்டி முத்துராமலிங்கத்தேவர் கல்லுாரி செயலாளர் பாண்டியன், நிர்வாகிகள் வடிவேல், ஆதவன், பாஸ்கரபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.உசிலம்பட்டி-: பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலை அருகில் பா.பி., சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ., கதிரவன், மாவட்ட கவுன்சிலர் காசிமாயன், நிர்வாகிகள் ராஜா, பாஸ்கரபாண்டியன், ஆதிசேடன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.