விளைச்சல் அதிகரிப்பால் கோயம்பேடில் காய்கறி மொத்த விலை குறைந்தது!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

21 ஜன
2022
07:52
பதிவு செய்த நாள்
ஜன 21,2022 07:50


சென்னை: விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில், கோயம்பேட்டில் கிலோ 10 முதல் 15 ரூபாய்க்கு பலவகை காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது.


கடந்தாண்டு அக்டோபர் முதல் பருவமழையால் பலவகை காய்கறிகளின் விளைச்சல் பாதித்தது. அதன் விலை கிடுகிடுவென உயர்ந்தது.ஒரு கிலோ தக்காளி 150 ரூபாய், கத்தரிக்காய், முருங்கைக்காய், வெண்டைக்காய் உள்ளிட்டவை, கிலோ 100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டது. இதனால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.


தற்போது, மாநிலத்தில் காய்கறிகள் விளைச்சல் அதிகரித்து உள்ளது. அண்டை மாநிலங்களில் இருந்தும் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், கோயம்பேடில் மொத்த விலையில் காய்கறிகள் விலை கணிசமாக குறைந்துள்ளது.

நேற்று மொத்த விற்பனையில் ஒரு கிலோ முள்ளங்கி 8-10, சவ்சவ் 5-8, கத்தரிக்காய் 10-15, பாகற்காய் 15, சுரக்காய் 10, சேனைக்கிழங்கு 13, சேப்பங்கிழங்கு 15 ரூபாய்க்கு விற்பனையானது.ஒரு கிலோ வெள்ளரிக்காய் 10, இஞ்சி 20, அவரைக்காய் 20, நுாக்கல் 12, கோவக்காய் 15, வாழைக்காய் 6 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஒரு கிலோ தக்காளி 25, உருளைக்கிழங்கு 15, பெரிய வெங்காயம் 20-35, சின்னவெங்காயம் 50-65, பீட்ரூட் 30, கேரட் 40, வெண்டைக்காய் 30, கோஸ் 40, பச்சைமிளகாய் 35 ரூபாய்க்கு விற்பனையானது. காய்கறிகள் விலை கோயம்பேடில் குறைந்தாலும், அவற்றை வாங்கி செல்லும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட வியாபாரிகள், தங்கள் பகுதிகளில் கூடுதல் விலையிலேயே அவற்றை விற்பனை செய்து வருகின்றனர்.
இதனால், காய்கறிகள் விலை குறைவின் பயனை அனுபவிக்க முடியாத நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

 

Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Just imagine - chennai,சீனா
22-ஜன-202211:37:00 IST Report Abuse
Just imagine ///காய்கறிகள் விலை கோயம்பேடில் குறைந்தாலும், அவற்றை வாங்கி செல்லும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட வியாபாரிகள், தங்கள் பகுதிகளில் கூடுதல் விலையிலேயே அவற்றை விற்பனை செய்து வருகின்றனர். இதனால், காய்கறிகள் விலை குறைவின் பயனை அனுபவிக்க முடியாத நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.///...... அரசு எவ்வழியோ மக்கள் அவ்வழி , மக்கள் எவ்வழியோ அரசு அவ்வழி.(கடந்த ஆண்டில் கச்சா எண்ணெய் குறைத்திருந்த போது ,பெட்ரோல் குறைக்கவில்லை ).
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
21-ஜன-202209:15:20 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் மழை பாதிப்பினால் விலை ஏறினா விடியல் அரசு தான் காரணம் - இப்படிக்கு வேலையில்லா வெட்டிசங்கிகள் சங்கம்
Rate this:
raja - Cotonou,பெனின்
21-ஜன-202216:21:40 IST Report Abuse
rajaகடைசி வரிகளை பிடிக்கவில்லையா உடன்பிறப்பே.... விலை குறைப்பு மக்களுக்கு போய் சேரவில்லை நடுவில் கொள்ளை அடிக்கிறாநுவோ அக்கிரம ராஜாக்கள்.......
Rate this:
Neutrallite - Singapore,சிங்கப்பூர்
21-ஜன-202217:57:53 IST Report Abuse
Neutralliteகச்சா என்னை விலை ஏறி, அதனால் பெட்ரோல் விலை ஏறினால் மோடி தான் காரணம்...இப்படிக்கு, வேலையை விட்டு விட்டு குடும்பத்துக்கு முட்டு குடுக்கும் கொத்தடிமைகள் சங்கம்......
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
21-ஜன-202209:08:11 IST Report Abuse
Bhaskaran Enge enna vilaivitraalum mayilaporil athiga vilai thaan
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X