வார்டு வரையறை, இட ஒதுக்கீட்டில் 'அதிருப்தி' : அவசர கதியில் நடந்ததாக அரசியல் கட்சியினர் குற்றச்சாட்டு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜன
2022
08:37

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் நகராட்சியில் வார்டு மறுவரையறையில் துவங்கி, இட ஒதுக்கீடு வரை அவசர கதியில் மேற்கொள்ளப்பட்டதால் குளறுபடிகள் நடந்திருப்பதாக அரசியல் கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர்.

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டது. இதனையடுத்து சமீபத்தில் தரம் உயர்த்தப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான அரசாணை அவசர அவசரமாக வெளியிடப்பட்டது. இதில் திருக்கோவிலுார் நகராட்சியும் அடங்கும்.தரம் உயர்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்ட அதே வேகத்தில் வார்டு மறுவரையறை செய்யப்பட்டது.

இதற்காக வேலுார் மண்டல நகராட்சி இயக்குனர் அலுவலகத்தில் இருந்து திருக்கோவிலுார் நகராட்சிக்கு 4 ஊழியர்கள் நியமிக்கப் பட்டிருந்தனர்.அவர்கள் சரியான புரிதல்கள் இன்றி ஒரே நாளில் அவசரகதியில் 27 வார்டுகளாக பிரித்தனர். இதுகுறித்து பொதுமக்களிடமோ, அனைத்து மக்கள் பிரதிநிதிகளிடமோ எந்த கருத்தும் கேட்கவில்லை. வார்டு வரையறை அப்படியே தேர்தல் அதிகாரிக்கு பரிந்துரைக்கப்பட்டது.

அவசரகதியில் பிரிக்கப்பட்ட இந்த வார்டு மறுவரையறையில் ஒரு சில வார்டில் அதிகமான குடியிருப்புகளும், ஒரு சில வார்டில் சொற்ப எண்ணிக்கையிலான வீடுகளும் உள்ளடக்கி வரையறை செய்யப்பட்டிருப்பது குறித்து பல்வேறு தரப்பினரும் நகராட்சி அலுவலகத்தில் முறையிட்டனர்.இதற்குத் தீர்வு கிடைக்காத நிலையில், அவசர அவசரமாக கடந்த 10ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
முறையற்ற வார்டு வரையறை காரணமாக 13வது வார்டில் 1,777 வாக்காளர்களும், 27வது வார்டில் வெறும் 393 வாக்காளர்கள் என அதிகமும், மிகக் குறைவான வாக்காளர்கள் கொண்ட வார்டுகள் வரையறுக்கப்பட்டது வெளியானது. இதற்கிடையே வெளியான இட ஒதுக்கீட்டிலும் குளறுபடிகள் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பொதுபிரிவினர் அதிகம் வசிக்கும் கட்டகோபுர வீதி, பள்ளிவாசல் வீதி, மாடவீதி, சின்னக்கடை வீதிகள் அடங்கிய 8வது வார்டு ஆதிதிராவிடருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக கவுன்சிலர் கனவில் தங்கள் வார்டை தக்க வைத்துக் கொள்வதற்காக அப்பகுதி மக்களுடன் இணைந்து செயல்பட்டு வந்த பலரும் வார்டு மாறவேண்டியுள்ளது. அவ்வாறு மாறினால் வெற்றி கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்து இப்போதே புலம்பத் துவங்கியுள்ளனர்.

நகராட்சியாக தரம் உயர்த்திய அதே கையோடு, வார்டு மறுவரையறை, வாக்காளர் பட்டியல் வெளியீடு, இட ஒதுக்கீடு அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டதே இத்தனை பிரச்னைகளுக்கும் காரணம் என அரசியல் கட்சியினர் மட்டுமின்றி பொதுமக்களும் குற்றம் சாட்டுகின்றனர்.

கமிஷனரிடம் மனு
திருக்கோவிலுார் நகராட்சிக்கான இட ஒதுக்கீட்டில், பொது பிரிவினர் அதிகம் 8வது வார்டு ஆதிதிராவிடர் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை கண்டித்து மாற்று சமூகத்தினர் தி.மு.க., மாவட்ட பிரதிநிதி மலையரசன் தலைமையில் நேற்று நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு 8வது வார்டை பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கிக் கொடுக்க வேண்டும் எனக்கோரி நேற்று கமிஷனர் கீதாவிடம் மனு அளித்தனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X