ஈரோடு: மாவட்டத்தில், கொரோனா தொற்று பாதிப்பு, நான்கு இலக்கத்தை நோக்கி செல்கிறது. ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில், 919 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, பாதிப்பு ஒரு லட்சத்து, 14 ஆயிரத்து, 110 ஆனது. நேற்று, 406 பேர் குணமடைந்தனர். 4,465 சிகிச்சையில் உள்ளனர். நேற்று மூவர் இறந்ததால், பலி எண்ணிக்கை, 721 என்றானது. கடந்த டிச.,31ல் தினசரி பாதிப்பு, 22 என இருந்த நிலையில், 20 நாளில், 919 ஆக உயர்ந்துள்ளது. ஒரே குடும்பத்தில் அல்லது ஒரு வீதியில், அதிக எண்ணிக்கையில் கொரோனா தொற்று ஏற்பட்டதை கண்டறிந்து, 20 இடங்களை தனிமைப்படுத்தி உள்ளனர். அப்பகுதியை கட்டுப்பாட்டு பகுதியாக அறிவித்து, காய்ச்சல் முகாம் நடத்தி வருவதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.