மொடக்குறிச்சி: பல்கலை தரவரிசை பட்டியலில் இடம் பிடித்த, அரசுக்கல்லூரி மாணவியருக்கு, பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மொடக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, எழுமாத்தூரில் செயல்பட்டு வருகிறது. பாரதியார் பல்கலை, 2021 ஏப்ரலில் நடத்திய இறுதியாண்டு தேர்வுகளில், இக்கல்லூரியை சேர்ந்த மூன்று மாணவியர், தர வரிசை பட்டியலில் இடம் பிடித்து அசத்தினர். முதுநிலை கணிணி அறிவியல் துறை மலர்விழி, தரவரிசை பட்டியலில் ஐந்தாமிடம், முதுநிலை கணிதத்துறை மாணவி கவுதமி ஆறாமிடம், இளங்கலை தமிழ் இலக்கியத்துறை மாணவி கிருத்திகா, ??வது இடத்தையும் பிடித்தனர். சாதனை படைத்த மாணவியருக்கு, கல்லூரியில் பாராட்டு விழா நடந்தது. முதல்வர் வடிவேல், துறைத்தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள், மாணவியருக்கு நினைவுப்பரிசு வழங்கி பாராட்டினர்.