ஈரோடு: கார் திருட்டு, வழிப்பறி வழக்குகளில் தொடர்புடைய இரு வாலிபர்களை, போலீசார் கைது செய்தனர். ஈரோடு தாலூகா போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். காரில் வந்த இரு வாலிபர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளனர். ஸ்டேசனுக்கு அழைத்து சென்று விசாரித்ததில், பிடிபட்டவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை சேர்ந்த அரவிந்த், 22, பூவரசன், 26, என்பது தெரியவந்தது. இருவரும் ஈரோடு தாலூகா போலீஸ் எல்லை பகுதியில் இரு நாட்களுக்கு முன் ஒரு பவுன் நகை, 2,200 ரூபாயை வழிப்பறி செய்தது உறுதியானது. நகை, பணத்தை மீட்டனர். விசாரணையில், திண்டல் தெற்குபள்ளம் ரோட்டை சேர்ந்த சிவக்குமார் என்ற ரியல் எஸ்டேட் அதிபரின், 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொகுசு கார் கடத்தலில் அரவிந்த், திருப்பதி என்ற பழங்குற்றவாளியுடன் ஈடுபட்டதை ஒப்பு கொண்டார். அரவிந்த், பூவரசன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.