மொடக்குறிச்சி: மொடக்குறிச்சி அருகே கைவரிசை காட்டிய கொள்ளையர் இருவரை கைது செய்த போலீசார், 25 பவுன் நகை, ஆறு லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். மொடக்குறிச்சி அருகே உள்ள லக்காபுரம், வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகேயுள்ள தாசன்காட்டு புதூரை சேர்ந்தவர் அருள் நாகலிங்கம். இவரின் வீட்டில் கடந்த ஆண்டு நவ.,??ம் தேதி, 20 பவுன் நகை, நான்கு லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் திருட்டு போனது. ஈரோடு டி.எஸ்.பி., ஆனந்தகுமார் தலைமையில், தனிப்படையினர் கொள்ளையர்களை தேடி வந்தனர். இது தொடர்பாக திருச்சி அருகேயுள்ள திருபெரும்புதூரை சேர்ந்த ராஜ்கமல், 31, டேவிட், 29, ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம், 20 பவுன் நகை, நான்கு லட்சம் ரூபாய் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர். இதேபோல் மொடக்குறிச்சி கேட் புதூரில் மூன்றரை பவுன், சின்னியம்பாளையத்தில் ஒரு பவுன், ஈரோடு தாலுகா போலீஸ் ஸ்டேஷன் எல்லை பகுதியில், ஒரு கிலோ வெள்ளி, ?.?? லட்சம் ரூபாய் திருடியதையும் கண்டுபிடித்து, நகை, பணத்தை பறிமுதல் செய்தனர். இருவரிடமும் இருந்து, கொள்ளைக்கு பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டது. இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.