நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் நேற்று முட்டையின் விலை, 20 காசு சரிந்து, 430 காசாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மண்டல, தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் அதன் தலைவர் டாக்டர் செல்வராஜ் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில், 450 காசாக இருந்த முட்டை விலை, 20 காசு குறைக்கப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை, 430 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. முக்கிய நகரங்களில் ஒரு முட்டை விலை (காசுகளில்): அகமதாபாத், 475, பர்வாலா, 467, பெங்களூரு, 457, பெங்களூரூ, 455, சென்னை, 465, ஐதராபாத், 415, மும்பை, 490, விஜயவாடா, 447, ?ஹாஸ்பேட், 415, கோல்கட்டா, 495 காசு என, நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.