பொங்கல் பரிசில் ரூ.500 கோடி ஊழலை மறைக்கவே ரெய்டு; அன்பழகன் தகவல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜன
2022
15:59

காரிமங்கலம்: ''பொங்கல் பரிசில் நடந்த, 500 கோடி ரூபாய் ஊழலை மறைத்து, மக்களை திசை திருப்ப ரெய்டு நடத்தப்பட்டது,'' என, மாஜி, அ.தி.மு.க., அமைச்சர் அன்பழகன் கூறினார்.

தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த கெரகோடஹள்ளியிலுள்ள மாஜி, அ.தி.மு.க., அமைச்சர் அன்பழகன் வீடு உள்ளிட்ட, 58 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று சோதனை நடத்தினர். அன்பழகன் வீட்டில், காலை முதல் நடந்த சோதனை இரவு, 9:45 மணிக்கு முடிந்தது. பின்னர் வீட்டிலிருந்து வெளியே வந்த அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது: தி.மு.க., அரசு பொங்கல் பரிசு தொகுப்பில், 500 கோடி ரூபாய் ஊழல் செய்ததை எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி வெளிக்கொண்டு வந்தார். பொங்கல் பரிசு தொகுப்பிலும், 21 பொருட்கள் வழங்காமல், தி.மு.க., அரசு மக்களை ஏமாற்றியது. இந்த, 500 கோடி ரூபாய் ஊழல் வெளியானதை, மக்கள் மத்தியிலிருந்து திசை திருப்ப வேண்டும் என்ற நோக்கத்தில், தி.மு.க., அரசு நேற்று ரெய்டு நடத்தியது. இரவு வரை நடந்த ரெய்டில் என் வீட்டிலிருந்து பணம், நகை, ஆவணங்கள் கைப்பற்றவில்லை என, லஞ்ச ஒழிப்பு போலீசார் எழுத்து மூலமாக தெரிவித்து, ஆவணங்களை வழங்கி உள்ளனர். ஆனால், தி.மு.க., அரசுக்கு இணக்கமாக செயல்பட வேண்டும் என்பதற்காக, பல தொலைக்காட்சிகள் காலையிலிருந்தே என் வீட்டில் கட்டு கட்டாக பணம், நகை, ஆவணங்கள் கைப்பற்றியதாக பொய்யான தகவல் வெளியிட்டு வந்தனர். அவர்கள், தாங்கள் செய்த தவறை திருத்தி, உண்மையான தகவலை செய்தியாக வெளியிட வேண்டும். இல்லையென்றால் இதை சட்ட ரீதியாக சந்திக்க உள்ளேன். இவ்வாறு, அவர் கூறினார். போலீசார், 2.65 கோடி ரூபாய் கைப்பற்றியதாக அறிக்கை வெளியிட்டுள்ளதை நிருபர்கள் கேட்டபோது, ''தி.மு.க., அரசின் கீழ் இயங்கும் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள்தான் இங்கு பணம், நகை, ஆவணங்கள் எதுவும் கைப்பற்றவில்லை என ஒப்புதல் கொடுத்துள்ளனர்,'' என்றார்.

 

Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X