அண்ணன் மகனை அடித்துக் கொன்ற 2 சித்தப்பாக்கள் கைது | தர்மபுரி செய்திகள் | Dinamalar
அண்ணன் மகனை அடித்துக் கொன்ற 2 சித்தப்பாக்கள் கைது
Added : ஜன 21, 2022 | |
Advertisement
 

அரூர்: அரூர் அருகே, பணம் கொடுக்கல், வாங்கலில் அண்ணன் மகனை அடித்துக்கொன்ற இரண்டு சித்தப்பாக்களை போலீசார் கைது செய்தனர்.

தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த மோப்பிரிப்பட்டியை சேர்ந்தவர் செல்லக்கண்ணன், 37. இவர், கடந்த ஓராண்டுக்கு முன், நிலத்தை விற்ற பணத்தில், அதே பகுதியை சேர்ந்த தன் சித்தப்பா முருகேசன், 52, என்பவருக்கு, 1.50 லட்சம் ரூபாய் கடன் கொடுத்துள்ளார். இதை செல்லக்கண்ணன் திருப்பி கேட்டபோது, சிறுக சிறுக திருப்பி கொடுத்து வந்தார். நேற்று முன்தினம் மாலை, 4:00 மணிக்கு செல்லக்கண்ணன், முருகேசனிடம் பணம் கேட்டபோது, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இரவு, 8:00 மணிக்கு, வீட்டின் மேல்மாடியில் செல்லக்கண்ணன் இருந்துள்ளார். அங்கு சென்ற முருகேசன் அவரது தம்பி சிவக்குமார், 45, ஆகியோர் கதவை திறக்க கூறியுள்ளனர். ஆனால், செல்லக்கண்ணன் கதவை திறக்கவில்லை. இதையடுத்து, கதவை உடைத்து உள்ளே சென்ற இருவரும், இரும்பு ராடால் தாக்கியதில் செல்லக்கண்ணன் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து செல்லக்கண்ணனின் தம்பி செல்வம், 36, புகார்படி, முருகேசன், சிவக்குமார் இருவரையும், அரூர் போலீசார் கைது செய்தனர். கொலையான செல்லக்கண்ணனுக்கு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்தான் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

 

Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X