அரசாணை வெளியிட தாமதம்: அதிருப்தியில் தொழிலாளர்கள் | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
அரசாணை வெளியிட தாமதம்: அதிருப்தியில் தொழிலாளர்கள்
Added : ஜன 21, 2022 | |
Advertisement
 

வால்பாறை;தேயிலை தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு அறிவிக்கப்பட்டு, ஐந்து மாதத்திற்கு மேலாகியும் அரசாணை வெளியிடாததால், தொழிலாளர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.கோவை மாவட்டம் வால்பாறை, நீலகிரி, தேனி மாவட்டம், திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களில் உள்ள தேயிலை, காபி எஸ்டேட்களில், 1.5 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்.நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை சம்பள பேச்சு வார்த்தை நடக்கிறது. கடந்த ஜூலை, 1ம் தேதியுடன் பழைய சம்பள பேச்சு வார்த்தை நிறைவடைந்தது.இந்நிலையில், தமிழக தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு, தினக்கூலியாக, 425.50 ரூபாய் வழங்க வேண்டும் என, தமிழக அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட், 18ம் தேதி அறிவித்தது. ஆனால், இதற்கான அரசாணை நேற்று வரை வெளியிடப்படவில்லை. இதனால் தொழிலாளர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.தொழிலாளர்கள் கூறுகையில், 'நீண்ட கால போராட்டத்திற்கு பின், தமிழக அரசு தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச தினக்கூலி அறிவித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால், அதற்கான அரசாணை வெளியிட தாமதமாகி வருவதால், தொழிலாளர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே அரசு அறிவித்துள்ள சம்பளம் உடனடியாக வழங்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.வரும் 25ல் போராட்டம்தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்துள்ள குறைந்தபட்சக் கூலி வழங்க அரசாணை பிறப்பிக்க வேண்டும். அரசு அறிவித்துள்ள சம்பளத்திற்கு எதிராக சில தொழிற்சங்கங்கள், இடைக்கால ஒப்பந்தம் செய்வதை தவிர்க்க வேண்டும். இவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ம.தி.மு.க., - சி.ஐ.டி.யு., - ஐ.என்.டி.யு.சி., ஆகிய தொழிற்சங்கங்கள்வரும், 25ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்துகின்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X