குளித்தலை: குளித்தலை அடுத்த, கள்ளை பஞ்., சுக்காம்பட்டியை சேர்ந்த சுப்பிரமணி மகன் ரமேஷ். 30. இவர், அதே பகுதியில் நடத்தி வரும் பெட்டிக்கடையில் மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தார். இதேபோல் ஆலத்தூர் பஞ்., அண்ணாநகரை சேர்ந்தவர் குழந்தைவேல், 60. இவர் தனது பெட்டிக்கடையிலும், புணவாசிபட்டியை சேர்ந்த பிரகாஷ், 30, தோகைமலை அருகே நாடாகாப்பட்டி மயானம் பகுதியிலும், வேடசந்தூர் ஆர்.கோம்பையூரை சேர்ந்த சுப்ரமணி, 45, என்பவர் கொசூர் சந்தை அருகே முள்காட்டிலும் மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தனர். இதுகுறித்து, தோகைமலை போலீசார் விசாரித்து ரமேஷ், குழந்தைவேல், பிரகாஷ், சுப்ரமணி ஆகியோர் விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த மதுபானங்களை பறிமுதல் செய்து, அனைவரையும் கைது செய்தனர்.