வால்பாறை:பொதுப்பணித்துறை தினக்கூலி பணியாளர்கள் சார்பில், முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:பொதுப்பணித்துறையில், 24 ஆண்டுகளுக்கு மேலாக, 1,458 தினக்கூலி பணியாளர்கள், அணைகளின் பராமரிப்பு பணிகளை இரவு பகலாக செய்து வருகிறோம்.கடந்த ஆட்சியில், பணி நிரந்தரம் செய்ய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், நீர்வளத்துறை, பொதுப்பணித்துறை என இரண்டாக பிரிக்கப்பட்டதால், பணி நிரந்தர அரசாணை வெளியிட தாமதமாகி வருகிறது.தமிழகம் முழுவதும், பல்வேறு இடங்களில் பொதுப்பணித்துறையில் பணிபுரியும் தற்காலிக தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். வறுமையில் வாடும் குடும்பங்களின் நிலையை உணர்ந்து, தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.