பல அடுக்குப்பயிரால் பயன்கள் ஏராளம்: வேளாண் துறை விவசாயிகளுக்கு 'அட்வைஸ்' | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
பல அடுக்குப்பயிரால் பயன்கள் ஏராளம்: வேளாண் துறை விவசாயிகளுக்கு 'அட்வைஸ்'
Added : ஜன 21, 2022 | |
Advertisement
 
Latest district News

ஆனைமலை:ஆனைமலை ஒன்றிய விவசாயிகள், பல அடுக்குப்பயிர் சாகுபடி செய்து பயன்பெற, வேளாண் துறையினர் அறிவுரை வழங்கியுள்ளனர்.ஆனைமலை ஒன்றியத்தில், 57 ஆயிரம் ஏக்கரில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சில விவசாயிகள் தென்னை இடையே, பாக்கு, ஜாதிக்காய், கோகோ, வாழை உள்ளிட்ட ஊடுபயிர்கள் சாகுபடி செய்துள்ளனர்.சிலர், மாட்டுத்தீவனத்துக்காகவும், கூடுதல் வருமானத்துக்காகவும், நிலக்கடலை, தட்டைப்பயறு, பாசிப்பயறு, 'கோ - 4' புல், மசாலா புல் உள்ளிட்டவை சாகுபடி செய்துள்ளனர்.பெரும்பாலான விவசாயிகள் ஒற்றை பயிர் சாகுபடி முறையை பின்பற்றுகின்றனர். பல அடுக்குப்பயிர் சாகுபடியால் ஏற்படும் நன்மைகள் குறித்து, விவசாயிகளுக்கு அதிகாரிகள் அறிவுரை வழங்கி உள்ளனர்.ஆனைமலை வேளாண் உதவி இயக்குனர் விவேகானந்தன் கூறியதாவது:தென்னை மரங்கள் மட்டும் வளர்த்து ஒற்றை பயிர் சாகுபடி செய்வதால், அதிக அளவிலான சூரிய ஒளி மண்ணில் விழுந்து, மண்ணில் உள்ள ஈரப்பதம் விரைவாக ஆவியாகிறது. இதனால், நுண்ணுயிர்கள் அழிந்து, மண்புழுக்களின் எண்ணிக்கை குறைகிறது.விவசாயிகள் தென்னை மரங்களுக்கு இடையே, கோகோ, ஜாதிக்காய், பாக்கு, வாழை, மிளகு உட்பட பலவகை பயிர்களை ஊடுபயிராக சாகுபடி செய்யலாம்.பல பயிர்களால், பலவித மணம் நிலவும், இதனால், பூச்சிகள் ஈர்க்கப்படுவது தவிர்க்கப்பட்டு, அவற்றின் தாக்குதல் வெகுவாக குறையும். வாழையில் வெள்ளை ஈக்களை அழிக்கும் இயற்கை எதிரியான, 'என்கார்சியா' ஒட்டுண்ணிகள் அதிகமாக இருக்கும்.தென்னையில் ஊடுபயிராக வாழை சாகுபடி செய்யும் போது, வெள்ளை ஈக்களின் தாக்குதல் குறையும். நிலக்கடலை, சோளம், புல் வகைகளையும் சாகுபடி செய்யலாம்.பல அடுக்குகளாக பயிர்கள் சாகுபடி செய்வதால், சூரிய ஒளி தரையில் நேரடியாக விழுவது தவிர்க்கப்படும். மண்ணில் நுண்ணுயிர்கள், மண்புழுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். கோகோ, ஜாதிக்காய் உள்ளிட்டவற்றின், இலை விழுந்து மண்ணுக்கு சிறந்த மூடாக்காக இருக்கும்.குறைந்த நீரில் அதிகப்படியான பயிர்களை சாகுபடி செய்ய முடியும். உரச்செலவு, பூச்சிக்கொல்லி செலவுகள் குறையும். ஒவ்வொரு பருவத்துக்கும் ஒவ்வொரு பயிரில் இருந்து நிலையான வருமானம் கிடைக்கும்.இவ்வாறு, தெரிவித்தார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X