வால்பாறை:வால்பாறையில், கடந்த சில நாட்களாக, உருமாறிய கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதால், சுற்றுலா பயணிகள் வருகை வெகுவாக குறைந்துள்ளது.சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'வால்பாறைக்கு தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், ஆழியாறு, மளுக்கப்பாறை செக்போஸ்ட்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு 'டோஸ்' தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டும், வால்பாறைக்கு அனுமதிக்கப்படுகின்றனர்,' என்றனர்.