படப்பை அரசு நிகழ்ச்சியில் சமூக விலகல் கேள்விக்குறி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜன
2022
22:37

ஸ்ரீபெரும்புதுார் : படப்பையில் தாலிக்கு தங்கம் வழங்கும் அரசு நிகழ்ச்சி, சமூக இடைவெளியின்றி கூட்ட நெரிசலுடன் நடந்தது.

மூன்று மணி நேரம் காத்திருந்து, பயனாளிகள் நலத்திட்டத்தை பெற்றனர்.சமூக நலத்துறை சார்பில், பெண்களுக்கு திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி, காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் அமைந்துள்ள குன்றத்துார் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில், நேற்று நடந்தது.காலை 10:00 மணிக்கு நிகழ்ச்சி நடக்கும் என அறிவிக்கப்பட்டது. இதனால், பயனாளிகள் 9:30 மணிக்கே வந்தனர்.வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊராட்சி தலைவர்களுக்கான ஆலோசனை கூட்டமும் நேற்று நடந்தது.

இதில் ஸ்ரீபெரும்புதுார் காங்., - எம்.எல்.ஏ., செல்வ பெருந்தகை, காஞ்சிபுரம் மாவட்ட கவுன்சிலர் மனோகரன் ஆகியோர் பங்கேற்று பேசினர். பின், மதியம் 12:30 மணிக்கு தாலிக்கு தங்கம் நிகழ்ச்சிக்கு சென்றனர்.இதனால் மூன்று மணிநேரம் காத்திருந்து 523 பயனாளிகள், தலா 8 கிராம் தங்கம் மற்றும் திருமண நிதியுதவி பெற்று சென்றனர்.ஒமைக்ரான் மற்றும் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், தாலிக்கு தங்கம் வழங்கும் அரசு நிகழச்சி, சமூக இடைவெளியின்றி கூட்டநெரிசலுடன் நடந்ததால், சமூக ஆர்வலர்கள் அதிருப்தி அடைந்தனர்.

 

Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X